NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

50 வருட காலத்திற்கு குத்தகைக்கு விடப்படும் இலங்கை வங்கி கட்டிடம்…!

நுவரெலியா குயின் எலிசபெத் அவென்யூவில் அமைந்துள்ள பழைய இலங்கை வங்கி ஓய்வு கட்டிடம் மற்றும் காணியை “Colonial Properties Private Limited” நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு (UDA) சொந்தமான சொத்தை மீண்டும் அபிவிருத்தி செய்வதற்கும் , பராமரிப்பதற்கும் தனியார் துறை முதலீட்டாளர்களிடமிருந்து போட்டி முதலீட்டு முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியது.

அது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையியல் இணக்கப்பேச்சுக் குழு தனது பரிந்துரையை சமர்ப்பித்தது.

அதன்படி, மேற்படி குழுவின் சிபாரிசுக்கு குயின் எலிசபெத் அவென்யூவில் அமைந்துள்ள பழைய இலங்கை வங்கி ஓய்வு கட்டிடம் மற்றும் காணியை குத்தகைக்கு விட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் மேற்படி சொத்தை Colonial Properties Private Limited நிறுவனத்திற்கு 50 வருட காலத்திற்கு குத்தகைக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

Share:

Related Articles