NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

553 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ள அமெரிக்கா!

இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக இயக்குனர் அதானி போர்ட்ஸ் மற்றும் இலங்கையின் முன்னணி நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் கூட்டமைப்பான வெஸ்ட் இன்டர்நேசனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட்டில், அமெரிக்கா 553 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில், தெற்காசிய பிராந்தியத்திற்கு முக்கியமான உட்கட்டமைப்பை வழங்கும் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை மேம்படுத்துவதற்கு இந்த அரை பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியை வழங்குவதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதுஇ இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்தியா உட்பட அதன் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்புக்கான அமெரிக்காவின் நீடித்த அர்ப்பணிப்பை மேலும் நிரூபிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles