NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

56 மதகுருமார்கள் சிறையில் – நீதி இராஜாங்க அமைச்சர் சபையில் தெரிவிப்பு…!

சிறுவர் மற்றும் பாலியல் வன்கொடுமை, நிதி மோசடி, புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புப்பட்டுள்ள 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன கூறியுனார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் அவர் இதனைக் கூறியுனார்.

மேலும், 2023 ஜூன் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் பல்வேறு 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவர்களில் 29 பௌத்த பிக்குகள், 3 இந்து குருமார்கள், 2 மௌலவிகள், கைதிகள் என்ற அடிப்படையிலும், 19 பௌத்த பிக்குகளும், ஒரு கத்தோலிக்க மதகுருவும் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 19 பௌத்த பிக்குகளும், ஒரு இந்து குருக்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பெண் பாலியல் குற்றச்சாட்டில் 3 பௌத்த பிக்குகளும் சிறையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், மனித படுகொலை குற்றச்சாட்டில் 2 பௌத்த பிக்குகளும், ஒரு இந்து குருக்களும் உள்ளதாகவும், ஒரு கத்தோலிக்க மதகுரு சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

மேலும், நிதி மோசடி குற்றச்சாட்டில் 2 பிக்குகளும், ஒரு இந்து மதகுருக்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 3 பௌத்த பிக்குகள், சிறையில் உள்ளதாகவும், கொடூர பாலியல் குற்றச்சாட்டுடன் 2 பௌத்த பிக்குகள் சிறையில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம், சிறு வயது பிள்ளைகள், ஆண் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 20 பௌத்த பிக்குகளும், ஒரு இந்து மதகுருக்களும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய சிறைச்சாலைகளில் 48 பௌத்த பிக்குகளும், 3 இந்து மதகுருக்களும், ஒரு மௌலவியும், 4 கத்தோலிக்க மதகுருமார்களும் சிறைக்கைதிகளாக உள்ளதாக நீதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தiமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles