NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

57 ஓட்டங்களை மட்டுமே பெற்ற ஆப்கானிஸ்தான் அணி…!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் தற்சமயம் மோதி வருகின்றன.

Taroubaயில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 11.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 56 ஓட்டங்களையே பெற்றுள்ளது.அந்த அணி சார்பில் அனைத்து வீரர்களும் 10 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் Marco Jansen மற்றும் Tabraiz Shamsi தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.இதன்படி தென்னாபிரிக்க அணிக்கு 57 ஓட்டங்களே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்கா அணி 6 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Share:

Related Articles