NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

6 மாத குழந்தை உட்பட இரு பிள்ளைகளை வீதியில் விட்டுச்சென்ற தாய்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அம்பலாங்கொட பிரதேசத்தில் 6 மாத கைக்குழந்தையையும், அவரது மூத்த சகோதரனான 6 வயது சிறுவனையும் வீதியில் விட்டுச் சென்றுள்ள தாய் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த குழந்தைகளை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

6 மாத குழந்தை பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 வயதான பிள்ளை தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளர்.

குறித்த பிள்ளைகளின் தாய் அடையாளம் கண்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share:

Related Articles