NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

6 நாட்களாக Amazon பொதியில் அமெரிக்காவை சுற்றிய பூனை!

அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் இணையத்தில் பொருட்களை வாங்கிய தம்பதியர், சில பொருட்களை திருப்பி அனுப்ப பொதி செய்த போது பெட்டிக்குள் தங்கள் செல்ல பூனை இருந்ததை அறியாமல் அனுப்பி விட்டனர்.

அமேசானின் பல மையங்களுக்கு 6 நாட்களாக பயணித்து கலிஃபோர்னியா சென்ற அந்த பொதியை ஊழியர்கள் பிரித்த போது உள்ளே பூனை இருந்ததைப் பார்த்தனர்.

அட்டைப் பெட்டியின் ஒரு பகுதி கிழிந்து இடைவெளி இருந்ததால் ஒக்சிஜன் கிடைத்த நிலையில், உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் 6 நாட்களாக உயிருடன் இருந்த அந்த பூனைக்கு உடனடியாக உணவும் தண்ணீரும் அளிக்கப்பட்டு கால்நடை மருத்துவரின் முதலுதவி அளிக்கப்பட்டது.

தகவல் தெரிந்ததும் விமானத்தில் பறந்து வந்த உரிமையாளர்கள் பூனையை பெற்றுச் சென்றனர். 

Share:

Related Articles