NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

6 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

அதன்படி, நுவரெலியா, காலி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான இரண்டாம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles