நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய தெற்கு, மத்திய, ஊவா, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் காற்றும் அதிகரித்து வீசக்கூடுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலையினால் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்ட மக்களுக்கே நாளை (9) மாலை 4.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டங்களுக்கு மழை தொடரும் பட்சத்தில் மண்சரிவு, சுவர் இடிந்து விழும், பாறை சரிவு, மண் சரிவு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.