முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசோன் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ், லாரன் சாஞ்சஸ் என்பவரை கடந்த ஆண்டு மே மாதம் நிச்சயம் செய்துள்ள நிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் வெளியானது.
குறித்த திருமண நிகழ்வு கொலராடோ மாகாணத்தின் ஆஸ்பன் நகரில் நடைபெற உள்ள நிலையில், 600 மில்லியன் டொலர்கள் வரை அதற்கு செலவிடப்படவுள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் என்ற பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது.
இது எந்த அளவுக்கு உண்மை? என தெரியாமல் இருந்த நிலையில், பெசோஸ் அதற்கான விளக்கம் அளித்துள்ளார்.
இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் தெரிவித்து உள்ளார். அந்த பதிவில், நீங்கள் வாசிக்கும் எல்லாவற்றையும் நம்பி விடாதீர்கள் என்ற பழமொழி இன்றளவில் அதிக உண்மையாக இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.