7 ஆவது ஆசிய கிண்ண ஹோக்கி போட்டி இன்று இந்தியாவின் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், இப்போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மேலும், இப்போட்டியில், தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான் மலேசியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்ளவுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் போட்டியில் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய அணிகளும் இன்றைய நாளில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.