7 குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்த தாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் , பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்த வைத்தியசாலையின் தாதி ஒருவர் குழந்தைகளின் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, குறித்த தாதி சந்தேகத்தின்பேரில் 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மான்செஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் விசாரணைகளில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை குற்றவாளி என கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, அவருக்கான தண்டனை தொடர்பான வாதம் நேற்று நடைபெற்றது.
இந்த வாதத்தின் நிறைவில், தாதிக்கு ஆயுள் தண்டனை வித்தித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதா சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.