NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

7 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு!

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாத்தறை மாவட்டத்தின் ஹக்மன, அக்குரஸ்ஸ மற்றும் பிட்டபெத்தர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளுக்கு இன்று பிற்பகல் 4 மணிவரையில் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Share:

Related Articles