NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

7 மாடிக் கட்டிடத்தில் இருந்து தவறி வீழுந்த பெண் உயிர்ப்பிழைப்பு !

அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரத்தில் 7 மாடி அடுக்கு கொண்ட கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.

கடந்த ஜூலை 29 ஆம் திகதி நள்ளிரவு 1.30 மணியளவில் டோமினி ரெய்ட் என்ற பெண் ஒருவர் தனது விட்டின் 7வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

ஏறக்குறைய 21 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதோடு பலத்த காயங்கள்இ எலும்பு முறிவுகளும் காணப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த ஆபத்தில் இருந்து அந்தப் பெண் உயிர்ப்பிழைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்துக்கான காரணம் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை எனவும் ரெய்ட் பேசத் தொடங்கிய பிறகே இது பற்றி தெரியவரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles