(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ரத்கம பிரதேசத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்தோடு, புடைய சந்தேக நபர் ரத்கம கம்மெத்த பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய திருமணமானவர் எனவும், சிறுமியின் உறவினர் எனவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வெளிநாட்டில் உள்ள நிலையில், பாட்டியின் பாதுகாப்பிலே வளர்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி வீட்டில் இருந்த போது அவரது பாட்டி பூ பறிக்க சென்றிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக இன்று (11) காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.