NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

700 விக்கெட் வீழ்த்திய 3ஆவது வீரர் அஸ்வின் – புதிய சாதனை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்தியா மறடறும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் தொடங்கியது.

நாணயசுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஓல் அவுட்டானது. ஆலிக் அதானஸ் மட்டும் 47 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

700 விக்கெட் வீழ்த்திய 3ஆவது வீரர் அஸ்வின் ஆவார்.

இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

ஏற்கனவே அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

Share:

Related Articles