பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 304 ஓட்டங்களை பெற்றது. பின்னர் 305 ஓட்ட வெற்றி இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி, 48.4 ஓவரில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி 304 ஓட்டங்களைப்பெற்று இலக்கை சமநிலை செய்தபோது, கேன் வில்லியம்சன் 7,000 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, கேன் வில்லியம்சன் 7,000 ஓட்டங்களையும் கடந்தார்.
167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 159 இன்னிங்சில் 7,000 ஓட்டங்களை கடந்துள்ளதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 7,000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக விராட் கோலி 159 இன்னிங்சில் 7,000 ஓட்டங்களை கடந்திருந்தார். தற்போது விராட் கோலியை பின்னுக்கு தள்ளி கேன் வில்லியம்சன் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.