NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

72 மணிநேரத்துக்குள் புகையிரத நிலைய அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானம்!

புகையிரத நிலைய அதிபர்கள் அடுத்த 72 மணிநேரத்துக்குள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

நடைமுறைகளை மீறி புகையிர நிலைய அதிபர்களை நியமித்தமைக்கு எதிராகவே, தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களை குறித்த பதவிகளுக்கான பரீட்சைகளை நடத்தி நியமிப்பதற்கும் அல்லது பதவி உயர்வு வழங்கி சம்பள உயர்வு வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும், இந்த நடைமுறைக்கு மாறாக தற்போது புதிய நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவித்தே, தொழிற்சங்க போராட்டம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles