NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

75 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் இருவர் கைது..!

சுமார் எழுபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து முறையற்ற விதத்தில் வெளியே எடுத்துச் சென்ற இரண்டு பெண் பயணிகளை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் நீர்கொழும்பு மற்றும் வென்னப்புவ பிரதேசங்களில் வசிக்கும் 45 மற்றும் 47 வயதுடைய இரு வர்த்தகப் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது பயணப் பையில் இருந்த 12 தங்க வளையல்கள், தங்க நெக்லஸ், 02 வளையல்கள், 01 தங்கப் பதக்கங்கள், 02 தங்க மோதிரங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்துள்ளனர்.

Share:

Related Articles