NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால்!

பயங்கரவாத தடுப்பு புதிய சட்டமூலம் இன்று திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹர்த்தால் பிரசாரத்தில் வட – கிழக்கு நில உரிமைப் பிரச்சினைகள், மத ஸ்தலங்கள் தொடர்பான பிரச்சினைகள், தொல்பொருள் இடங்கள் தொடர்பான பிரச்சினைகள், தமிழர்களின் காணி உரிமைகள் பறிப்பு போன்ற விடயங்களைச் சேர்க்குமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னராக அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

அதன்படி வட – கிழக்கு பகுதிகளில் இன்றைய தினம் பூரண கடையடைப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகன போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், அரச ஊழியர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Share:

Related Articles