இலங்கை வங்கியின் 84வது ஆண்டு நிறைவு விழா நேற்று கொழும்பில் உள்ள இலங்கை வங்கி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
ஆண்டு நிறைவையொட்டி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த புதிய கணக்கு ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த புதிய சேமிப்புக் கணக்கின் மூலம், கணக்கு வைத்திருப்பவர் இலக்கு அடிப்படையிலான முதலீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தும் திறனைப் பெற்றுக்கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த புதிய கணக்கில் ஒரே நேரத்தில் பல கணக்குகளை திறக்கும் வசதியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.