ஏக்கல, ஜா-எல, கோரலெலியவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
கோஷிலா ரோஷன் என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி காலை 7.30 மணியளவில் வகுப்பிற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
12 நாட்களாகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது தாயார் கூறினார்.
குறித்த யுவதி கடந்த 8ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறுவது வீட்டின் சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுமியின் தாய், ‘அவளைப் பற்றி இன்னும் எந்த தகவலும் இல்லை. நாங்கள் இது வரை காத்திருக்க முடியாது என்று ஊடகங்களிடம் கூறியுள்ளோம். யாராவது எனது மகளைப் பார்த்திருந்தால், அருகிலுள்ள பொலிஸுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவரது புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
