NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடற்பரப்பில் நச்சு மீன் – மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் மற்றும் கடற்றொழி லாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தவகை பாறை மீன்கள் கடித்து பலர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பல செய்திகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஒட்டுண்ணியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜானக ரூபன் கூறுகையில்,

‘கோன்மஹாஸ்டோன் ஃபிஷ்’ (GonmahaStone Fish) என நச்சு மீன் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மீன்கள் இடிபாடுகள் நிறைந்த பாறை அடுக்குகள், ஆழமற்ற தடாகங்கள் மற்றும் குறைந்த அலைகள் உள்ள பகுதிகளில் காணப்படும். இந்த மீன்களின் மெதுவான இயக்கம் காரணமாக அவை சில நேரங்களில் பாசிகளால் மூடப்பட்டிருக்கும்.

இந்த மீன்கள் இனப்பெருக்க நோக்கத்துக்காக கரைக்கு அருகில் வரும் அதேநேரம் மீனின் முதுகில் உள்ள முதுகெலும்புகள் விஷம் கொண்டது. இதனால் கடலில் குளிக்கும் போது செருப்பு அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles