கடந்த ஒக்டோபர் மாதம் வரை நீர் கட்டணம் செலுத்தாத 95,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒக்டோபர் 31ஆம் திகதி துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை 95,241 ஆகும்.
எவ்வாறாயினும், 12.97 பில்லியன் ரூபா நிலுவைத் தொகை வசூலிக்கப்பட உள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.