NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

97 வயது மூதாட்டியின் சாதனை – குவியும் பாராட்டுக்கள்…!

களனிப் பல்கலைக்கழகத்தில் 97 வயதான மூதாட்டி ஒருவர் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.

குறித்த பல்கலைக்கழகத்தின் பாலி பௌத்த கற்கைகள் முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தினால் இவ்வருடம் நடாத்தப்பட்ட பௌத்த கற்கையிலேயே அவர் முதுமாணி பெற்றுள்ளார்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் கற்ற 97 வயதான விதானகே லீலாவதி அஸ்லின் தர்மரத்ன என்பவரே இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

7 பாடங்களைக் கொண்ட இந்த முதுகலைப் பட்டத்திற்கான பாடங்களின் பரீட்சையில் அவர் தோற்றியுள்ளார்.

அஸ்லின் தர்மரத்ன தனது 94வது வயதில் வித்யோதயா பல்கலைக்கழகம் நடத்திய திரிபிடக தர்மம் மற்றும் பாலி மொழி பரீட்சையில் சித்தியடைந்தார்.

இறுதித் தேர்வு எழுதும் போது அவர் 6 பெண் பிள்ளைகளை கவனித்து கொண்டு வாழ்க்கையை எதிர்கொண்டு இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பத்திரத்துறை பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் 1952 ஆம் ஆண்டு அந்த துறையில் பரீட்சையில் சித்தியடைந்த முதல் பெண்மணி அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

97 வயதில் கல்வித்துறையில் சாதனை பெண்ணாக திகழும் விதானகே லீலாவதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெ

Share:

Related Articles