யாழ்ப்பாணம், வடமராட்சி, கட்டக்காடு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மர்மப் பொருள், கடற்படையினரால், அப்பகுதி மீனவர்களின் உதவியுடன் நேற்று கரைக்குக் கொண்டுவரப்பட்டது.
குறித்த பொருள் நேற்று (25) வடமராட்சி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குழு கடலில் மிதப்பதைக் கண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த வடமராட்சி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குழு கடலில் அவ்வாறானதொரு பொருள் மிதப்பதைக் கண்டு கடற்படையினருக்கும் யாழ்ப்பாண உதவிப் பணிப்பாளருக்கும் அறிவித்துள்ளனர்.
இரும்பினால் கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ள மிதவையின் மேற்பகுதி கூம்பு வடிவில் இருந்தாலும் கீழ்பகுதி அதிக அளவு இரும்பை பயன்படுத்தி அதிக எடை தேவைப்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் மீட்கப்பட்ட விசேட மிதவை வடமராட்சி கடற்கரைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.