NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் பாரவூர்தி விபத்துக்குள்ளானதில் 10 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு.!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் , தோணிகல பகுதியில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் , வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தநிலையில் மின்கம்பம் சேதமடைந்ததையடுத்து அப்பகுதியில் 10 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து இப்பலோகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles