AI Technology என்பது தற்போது சுமார் அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்ட நிலையில் அமேசான் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் ஃபயர் டிவியில் AI Technology’யை புகுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசானின் பொழுதுபோக்கு சாதனங்கள் மற்றும் சேவைகளின் துணை தலைவர் டேனியல் ராஷ் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’அமேசான் ஃபயர் டிவியை இன்னும் தனித்துவமாக முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பாக AI தொழில்நுட்ப திறனை இந்த டிவியில் நிறுவ திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ஃபயர் டிவியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் பல்வேறு பலன்களை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அமேசான் ஃபயர் டிவியில் AI தொழில்நுட்ப திறனை இணைப்பதால் பயனர்கள் தங்கள் சொந்த விருப்பத்தேர்வுகள், பிரபலமான தீம்களின் அடிப்படையில் தங்கள் டிவிகளுக்கான கட்டளை குரலை பயன்படுத்தலாம்.
அதேபோல் பயனர்கள் தங்கள் டிவியில் இயற்கைக் காட்சிகள் போன்ற தனித்துவமான பின்னணியை உருவாக்க AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளின் பரிந்துரைகளை AI மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் ஃபயர் டிவியில் AI தொழில்நுட்பத்தை சேர்ப்பது என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும். AI தொழில்நுட்பம், ஃபயர் டிவியை மேலும் தனிப்பயனாக்க மற்றும் ஈடுபாட்டுடன் மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.