NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

AI தொழில்நுட்பம் – Fashion Showவில் போட்டியாளர்களாக உலகப் பிரபலங்கள்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமானது உலகளவில் பல தாக்கங்களை மேற்கொண்டு வருகின்றது.

இது ஒரு வகையில் நன்மையை கொடுக்கிறது என்றாலும் இதில் பாதகங்கள் இல்லாமல் இல்லை.

அந்த வகையில் இதுவரையில் வெளிவந்த AI தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட வீடியோக்களிலேயே சிறந்த வீடியோ இதுதான் என்று எலான் மஸ்க் அவரது எக்ஸ் தளத்தில் வீடியோவொன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் உலகத் தலைவர்கள், மற்றும் பிரபலங்கள் ஆகியோர் ஒரு ஃபெஷன் ஷோவில் கலந்துகொண்டால் எப்படியிருக்கும் என்பதே குறிப்பிடப்பட்டுள்ளது.

என்னதான் AI தொழில்நுட்பத்தினால் இந்த வீடியோ உருவாக்கப்பட்டிருந்தாலும் உலகத் தலைவர்களை வைத்து உருவாக்கியதால் இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Share:

Related Articles