NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இடைவிடாத குண்டுவெடிப்புகளுடன் உணவுஇ தண்ணீர் மற்றும் விநியோகங்களை இஸ்ரேல் தடுப்பதால் ஏற்பட்ட பாரிய பட்டினிகளுக்கு மத்தியில், காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தஞ்சம் அடைந்துள்ள ரஃபா மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தவுள்ள தாக்குதலுடன் இந்த பாரிய இறப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்க உள்ளது.

காஸாவில் முழு மக்களும் கடுமையான பட்டினியை எதிர்கொள்வதாக யுனிசெஃப் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரஃபா நகரில் தொடரும் இறப்புகளுக்கு நியாயம் கோரி, சமூக வலைத்தளங்களில் ‘ALL EYES ON RAFAH‘ என்ற தலைப்பின் கீழ் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.

Share:

Related Articles