(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அமேசோன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரின் தோழி லோரென் சன்செஸ் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது இந்த தம்பதி பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரென் சன்செஸ் இடையே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில், சன்செஸ் கையில் இதய வடிவம் (ஹார்டின்) மோதிரம் இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.