NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Android phone குறித்து Google வெளியிட்ட புதிய Update !

பத்து வருடத்திற்கும் பழமையான ஆண்ட்ராய்டு கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ஆதரவு அல்லது அப்டேட்டுகள் இனி கிடைக்காது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறந்த பயனாளர் அனுபவம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புகளை வழங்கக்கூடிய புதிய ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டம்களில் கவனம் செலுத்துவதற்காகவே இந்த முடிவை கூகுள் நிறுவனம் எடுத்துள்ளது.

கூகுள் பிளே சேவையில் இனி வரக்கூடிய நாட்களில் கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ஆதரவை நிறுத்த உள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

ஓகஸ்ட் 2023 முதல் கிட்கேட்டிற்கான (API levels 19 & 20) அப்டேட்கள் வெளியிடுவதை கூகுள் பிளே சர்வீசஸ் நிறுத்த உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான நபர்கள் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை அப்டேட் செய்வதால் கிட்கேட் OS இருக்கக்கூடிய ஆக்டிவ் சாதனங்களின் எண்ணிக்கை ஜூலை 2023 கணக்கெடுப்பின்படி 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. ஆகவே எதிர்காலத்தில் கிட்கேட்டிற்கு கூகுள் பிளே சர்வீசஸ் மூலமாக எந்த ஒரு ஆதரவும் கிடைக்காது. 23.30.99 -க்கு அப்பால் KK சாதனங்கள் பிளே சர்வீசஸ் APK வெர்ஷன்களை பெறாது“, எனவும் கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles