NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Apple சாதனங்களை எனது நிறுவனங்களுக்குள் கொண்டுவரக்கூடாது’ – எலோன்

அப்பிள் நிறுவனம் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை அதன் இயங்குதளங்களில் ஒருங்கிணைத்தால், ஒரு அப்பிள் சாதனம் கூட தனது நிறுவன வளாகத்துக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டாது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

“அப்பிள் நிறுவனம் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை அதன் இயங்குதளத்தில் ஒருங்கிணைத்தல் ஒரு விதிமீறல். எனவே என் நிறுவனத்துக்கு வருபவர்கள் வாசலிலேயே அப்பிள் சாதனங்களை ஒப்படைக்க வேண்டும். அங்கே அவை பத்திரமாக வைக்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.

அப்பிள் நிறுவன சேவைகள் மற்றும் சாதனங்களில் அப்பிள் இன்டர்லிஜன்ட்ஸ் புகுத்தப்படும் என சாட் ஜிபிடி சேவை அறிவித்திருந்தது.

இதனை கண்டித்த எலான் மஸ்க், “உங்கள் தகவல்களை ஓபன் ஏஐயிடம் ஒப்படைத்தால் அதற்கு என்னவாகும் என அப்பிள் நிறுவனத்துக்கு ஒரு அக்கறையுமில்லை. அவர்கள் உங்களை விற்பனை செய்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles