ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம், மற்றொரு பாகிஸ்தான் அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான ஷதாப் கான் மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பாபர் அசாம்
பாகிஸ்தான் அணியின் தலைவரும் இடதுகை துடுப்பாட்ட வீரருமான பாபர் அசாம் ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தரவரிசை பட்டியலில் முதலாவது இடத்தில உள்ளார்.
ஷதாப் கான்
பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஷதாப் கான் கடந்த 26ம் திகதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் ஆட்டநாயகன் விருதை ஷதாப் கான் கைப்பற்றினர்.
நிக்கோலஸ் பூரன்
இந்தியாவுடன் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை ஆறு வருடங்களுக்கு பின்னர் சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்ற இவர் முக்கிய பங்குவகித்தார்.
இந்த தொடரின் ஆட்டநாயகன் விருதை நிக்கோலஸ் பூரன் கைப்பற்றினர்.
மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலில் நெதர்லாந்து வீராங்கனை ஐரிஸ் ஸ்வில்லிங், மலேசிய வீராங்கனை ஐன்னா ஹமிசா ஹாஷிம் மற்றும் அயர்லாந்து வீராங்கனை அர்லீன் கெல்லி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.