பயணிகள் போக்குவரத்தில் புதியதொரு அத்தியாகத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் பாரிய வாகன நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி பிரைவட் லிமிடட் நிறுவனம் பொதுப் போக்குவரத்துக்காக மாதிரி இலத்திரனியல் முச்சரக்க வண்டிகளைக் கொண்ட ஈ-ட்ரைவ் டெக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய மாதிரி இலத்திரனியல் வாகன திட்டமானது, சுற்றாடலுக்கு நட்பான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், புகை வெளியேற்றம் இன்றி காபன் வெளியேற்றத்தை குறைக்கக்கூடிய வகையிலும், நிலத்தடி எரிபொருள்களில் தங்கியிருப்பதைக் குறைப்பதற்கு உதவுவதுடன் மற்றும் வாகன பராமரிப்பு செலவீனங்களை குறைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயணிகளுக்கு செலவுச் சிக்கனமான போக்குவரத்து சாதனத்தை வழங்குவது மாத்திரமன்றி, இரைச்சல் குறைவான, சுமுகமான பயணத்தின் ஊடாகப் பாதுகாப்பான மற்றும் சிறந்த அனுபவத்தைப் பயணிகளுக்கு வழங்குவதும் ஈ-ட்ரைவ் டக்ஸி திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
நாட்டில் ஒழுக்கமான, தொழில்முறை டக்ஸி சாரதிகள் அணியை உருவாக்கும் நோக்கத்துடன், ஈ-ட்ரைவ் டக்ஸி சேவையின் சாரதிகள் இந்த வாகனத்தை எப்படி செலுத்துகின்றனர் என்பது மட்டுமல்லாது ஈ-ட்ரைவ் திட்டத்தின் கீழுள்ள அனைத்து வாகனங்களும் நிறுவனத்தினால் கண்காணிக்கப்படுகின்றன.
அது மாத்திரமன்றி ஈ-ட்ரைவ் டக்ஸி சேவையில் உள்ள சாரதிகளுக்கு சீருடை வழங்கப்பட்டிருப்பதுடன், ஏதாவது நிகழ்வுகள் அல்லது சாரதிகள் தொடர்பான பின்னூட்டங்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களுடன் சாரதிகள் குறித்த விபரங்கள் வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
ஈ-ட்ரைவ் டக்ஸி சேவை குறித்து டேவிட் பீரிஸ் ஹோல்ட்டிங் பிரைவட் லிமிடட் மற்றும் டேவிட் பீரிஸ் ஓட்டோ க்ளஸ்டரின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜயந்த ரத்னாயக்க கருத்துத் தெரிவிக்கையில், சூழலுக்கு நட்பான, செலவுச் சிக்கனமான போக்குவரத்து சாதனத்தைப் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு இந்த தளத்தை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், முச்சக்கர வண்டி சேவைகளுக்கு புதிய தரங்களை அமைக்கும் என நம்புகிறோம்.
இலங்கையில் உள்ள பஜாஜ் வாகனங்களின் நிபுணர்கள் என்ற வகையில், இலத்திரனியல் திறனுக்கு மாற்றப்பட்டுள்ள இந்த மின்சார வாகனங்களுக்கு நம்பிக்கையுடன் உத்தரவாதம் அளிக்க முடியும்.
சரியான மாற்றங்களால் மட்டுமே வாகனத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பையும் வசதியையும் உறுதிப்படுத்த முடியும்’ எனத் தெரிவித்தார்.
இந்த முச்சக்கரவண்டி முதற்கட்டமாக கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள புறநகர்களில் மாத்திரம் இயக்கப்படும். வெள்ளை மற்றும் பச்சை நிறம் கலந்த தனித்துவமான நிறத்தினால் இதனை இலகுவில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதுடன், திங்கள் முதல் சனிக்கிழமை ஆகிய நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை இதன் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
YOGO டக்ஸி செயலி மூலமாகவும், பிரத்யேக தொலைபேசி இலக்கமான 077 7 606077 மூலமாகவும் முன்பதிவு செய்து அவற்றின் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த முச்சக்கரவண்டிகள் ஒரு கிலோமீட்டருக்கு 65 ரூபாய் என்ற நேரடியான கட்டணத்தையும், கூடுதலான பீக் ஹவர் கட்டணமும் இல்லாமல் வசூலிப்புக் கட்டணம் இல்லை என்பதால் கட்டணம் மலிவாக இருக்கும். பணம் அல்லது கிரெடிட்ஃடெபிட் காட்டுக்கள் மூலம் எளிதாக பணம் செலுத்தும் திறனைக் கொண்டிருப்பது இந்த சேவையின் தனித்துவமான வசதியாகும்.