NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Ballon d Or) விருது – இம்முறை மிட் ஃபீல்டர் ரோட்ரிக்கு..

கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றான பலோன் டி ஓர் (Ballon d Or) விருது இம்முறை மிட் ஃபீல்டர் ரோட்ரிக்கு (Midfielder Rodri) வழங்கப்பட்டுள்ளது.

மெஸ்சி பார்சிலோனாவுக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிய காலத்தில் இருவரும்தான் இந்த விருதை மாறிமாறி வாங்கி வந்தனர்.

தற்போது மெஸ்சி அமெரிக்கா லீக்கில் விளையாடி வருவதுடன், ரொனால்டோ சவுதி லீக்கில் விளையாடி வருகிறார். ஆகையால், இந்த வருட விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் இருவருடைய பெயரும் இடம்பெறவில்லை.

இந்நிலையில், இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி ஓர் விருதை வென்றுள்ளார்.

2023 தொடக்கம் 2024ஆம் ஆண்டுக்கான சீசனில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles