NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bikeகளில் முகத்தைப் பார்த்து Unlock செய்யக்கூடிய I-Face அறிமுகம்!

BMW நிறுவனம் முதன் முறையாகத் தனது பைக்குகளில் முகத்தைப் பார்த்து Unlock செய்யக்கூடிய I-Face என்ற பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பைக்குகளை அதன் உரிமையாளரைத் தவிர வேறு யாராலும் Unlock செய்ய முடியாது. இதனால் பைக் திருடப்படாமல் இருக்கும்.

நிறுவனம் முதன் முறையாகத் தனது பைக்குகளில் முகத்தைப் பார்த்து அன்லாக் செய்யக்கூடிய ஐபேஸ் என்ற பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பைக்குகளை அதன் உரிமையாளரைத் தவிர வேறு யாராலும் அன்லாக் செய்ய முடியாது. இதனால் பைக் திருடப்படாமல் இருக்கும்.

இந்த தொழில்நுட்பத்தை வைத்தியர் ஜெர்கார்ட் லெஸ்ஜோனின் உதவியுடன் தயாரித்துள்ளது. இவர் மனிதர்கள் கண்களை வைத்து ஒவ்வொரு தனி மனிதனையும் அடையாளம் காணும் தொழிற்நுட்பத்தை உருவாக்கியவராவார். இந்த பேஸ் ரெகனனேஷன் தொழில்நுட்பம் புதிய 3D டெக்னாலஜியில் இயங்குகிறது. இது பைக்குகளின் DFD டிஎஸ்பிளேவில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சிஸ்டம் எங்கு பொருத்தப்பட்டுள்ளது என்பதை வெளியிலிருந்து பார்க்க முடியாது. இது கிளஸ்டருக்கு கீழே பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஸ்டிரைப் புரோஜெக்ஷன் டெக்னாலஜியை கொண்டு இயங்குகிறது. இது கொஞ்சம் பழமையான டெக்னாலஜி தான். ரிவர்ஸ் இன்ஜினியரிங் துறையில் இந்த டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. பைக்கில் அமர்ந்த படி ரைடர் ஹெல்மெட் இல்லாமல் இருக்கும் போது இந்த சிஸ்டம் அவரது முகத்தை 3D ஆகவும், Biometric ஆகவும் கிரகித்து இந்த சிஸ்டத்தை இயக்கும்.

Rider அமர்ந்திருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட 3D இமேஜை ஏற்கனவே இந்த சிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இமேஜ் உடன் ஒப்பிட்டு பார்க்கும். இரண்டும் ஒத்துப் போனால், இக்னீஷியன், ஹேண்டில்பார் லாக், மற்றும் மற்ற அம்சங்கள் எல்லாம் அன்லாக் ஆகும். அதன் பின் ரைடர் ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டிச்செல்ல முடியும். இந்த 3d ஸ்கேனிங்கிற்காக இன்ஃப்ராரெட் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பகல் நேரம் மட்டுமல்ல இரவு நேரத்தில் வெளிச்சமே இல்லாத இடத்தில் கூட துல்லியமாக்கக் கண்டறிந்து கண்களை ஸ்கேன் செய்து விட முடியும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles