கல்கமுவ பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
உஸ்கல சியம்பலங்காமுவ கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி சில வாரங்களுக்கு முன்னர் மாணவன் ஒருவருடன் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த மாணவனை பொலிஸார் கைது செய்து சிறுவர் சீர்த்திருந்த கல்லூரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்தின் பின்னர் வீடு திரும்பிய சிறுமி விபரீத முடிவை எடுத்துள்ளார் எனவும், மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.