NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Breaking news – டயானா மீதான தாக்குதல் – விசாரணை நடத்த விசேட குழு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று பிரதி சபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்தார்,

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையிலான இந்த குழுவில் எம்.பிக்களான சமல் ராஜபக்ச , ரமேஷ் பத்திரண, கயந்த கருணாதிலக்க , இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் இதர உறுப்பினர்களாவர்.

இந்த குழுவின் அறிக்கை கிடைத்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென சபாநாயகர் மேலும் அறிவித்தார்.

Share:

Related Articles