NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ChatGPT உதவியுடன் நடைபெற்ற திருமணம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

Open AI – ChatGPT உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் நிலையில், ChatGPTஉதவியுடன் இயங்கும் ஒரு இயந்திரத்தின் உதவியுடன் அமெரிக்காவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு Chatbot நாம் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு பதில்களை கொடுக்கும் ஒரு விரிவான மொழி கருவியாகும்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ரீஸ் வீஞ்ச்-டெய்டன் ட்ரூட் ஜோடிக்கு கடந்த வாரம் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

வழக்கமான திருமணங்களை போல் அல்லாமல், தேவாலயத்தில் அருட்தந்தைக்கு பதிலாக ChatGPT உதவியுடன் இயங்கும் ஒரு இயந்திரத்தால் இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரம் வரவேற்புரையை நிகழ்த்தி திருமண விழாவை நடத்தி விட்டு முடிவில் நிறைவு திருப்பலியுடன் திருமண விழாவை முடித்து வைத்தது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share:

Related Articles