NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

CIDஇல் முன்னிலையாகவுள்ள யோஷித்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ இன்றைய தினம் (03) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி அவர் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

அத்துடன் அந்த காணி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான நெவில் வன்னியாராச்சி கடந்த வெள்ளிக்கிழமை குறித்த குழுவில் முன்னிலையானார்.

இதன்போதுஇ அவர் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார். இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செல்லவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்குச் செல்லவுள்ளார்.

Share:

Related Articles