NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

COPE குழுவிலிருந்து விலகியுள்ள 07 பாராளுமன்ற உறுப்பினர்கள்…!

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அங்கத்துவத்திலிருந்து பாராமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவும் விலகியுள்ளார்.

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இருந்து இதுவரையில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளனர்.

முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே ஆகியோரும் விலகியுள்ளனர்.

தங்களது இந்த பதவி விலகல் குறித்து சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் கோப் குழுவின் தலைவராக முன்னதாக, பதவி வகித்து வந்திருந்தார்.

இதேவேளை, கோப் குழுவின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர ,எரான் பதவி விளங்கியுள்ளனர்.

Share:

Related Articles