சீனாவின் வுஹான் நகரில் COVID தொற்றுநோய் பரவ ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில் அதன் தோற்றம் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தானபம் சீனாவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது ஒரு தார்மீக மற்றும் அறிவியல் கட்டாயமாகும் என்று உலக சுகாதார மையம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாடுகளுக்கு இடையே வெளிப்படைத்தன்மை, பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல், எதிர்கால தொற்றுநோய்களுக்கு உலகத்தால் போதுமான தயார் நிலையை உருவாக்க முடியாது என்றும் உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ளது.