NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

CSK ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவோன் கான்வே IPL முதல் பாதியில் இருந்து விலகல்!

நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவோன் கான்வே, கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இவ்வாண்டுக்கான IPL சீசனின் முதல் பாதியில் இருந்து விலகியுள்ளார்.

அகமதாபாத்தில் கடந்தாண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கை கான்வேவுக்கு , சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்து முடிந்த T20I தொடரின் போது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. 

32 வயதான அவர் தற்போது நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாரம் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

Share:

Related Articles