துபாய் உலகின் மிகவும் முக்கியமான வர்த்தக நகரமாக திகழ்ந்து வருகிறது.
இந்த பிராந்தியத்தில் விமான போக்குவரத்து, வர்த்தகம், நிதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கடந்த 2021ம் ஆண்டு முதல் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இதன் காரணமாக துபாய்க்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வருவது அதிகரித்துள்ளது.
துபாயில் மக்கள்தொகை இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் மக்கள்தொகை 35 லட்சத்து 50 ஆயிரத்து 400 ஆக இருந்துள்ளது இந்த எண்ணிக்கை தற்போது 36 லட்சத்து 3 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் துபாயில் மக்கள்தொகை கடந்த ஒரு ஆண்டில் 89 ஆயிரத்து 196 ஆகவும், கடந்த 18 மாதங்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 595 ஆகவும் அதிகரித்துள்ளது.
துபாயில் மக்கள்தொகை கடந்த 1960ம் ஆண்டு இருந்ததைவிட நகர்ப்பகுதி 80 மடங்கும், கிராமப் பகுதிகளில் 170 மடங்கும் அதிகரித்துள்ளது.