NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

EURO CUP 2024 – 4வது முறையாக கிண்ணத்தை வென்ற ஸ்பெயின்!

யூரோ கிண்ண கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் அணி நான்காவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியும், இங்கிலாந்து அணியும் பல பரிட்சை நடத்தியது.

இதில் இங்கிலாந்து அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக யூரோ கிண்ண பைனலுக்கு தகுதி பெற்றிருக்கிறது. அது மட்டுமில்லாமல் கடந்த 58 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி யுரோ கிண்ண சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை.

இதனால் இந்த 58 ஆண்டு கனவை இங்கிலாந்து வீரர்கள் நனவாக்குவார்கள் என அந்த நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதில் விறுவிறுப்பான இந்த போட்டியில் இரண்டு அணிகளுமே ஆக்ரோஷமாக விளையாடினர். போட்டியின் பத்தாவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பெல்லிங்காம் தமக்கு கிடைத்த ப்ரீ கீக் வாய்ப்பை வீணடித்தார்.

இதேபோன்று போட்டியின் 11 வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் தமக்கு கிடைத்த பிரீ கீக் வாய்ப்பையும் வீணடித்தார். இப்படி பரபரப்பாக முதல் பாதி முடிந்தது. இதனை அடுத்து இரண்டாவது பாதி தொடங்கிய உடனே போட்டியின் 47-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் முதல் கோல் அடித்தார்.

இதனால் ஸ்பெயின் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் ஸ்பெயின் எளிதில் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பால்மர் அபாரமாக கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தார். இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த முறை போல் இம்முறையும் போட்டி சமனில் முடிந்து பெனால்டி சூட் அவுட் முறையில் தான் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போதுதான் போட்டியில் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டது. சப்ஸ்டியூட் வீரராக களத்திற்கு வந்த ஸ்பெயின் வீரர்களுக்கு போட்டியின் 86வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் ஸ்பெயின் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனை அடுத்து போட்டியின் கடைசி நிமிடங்களில் கோல் அடிக்க இங்கிலாந்து வீரர்கள் கடும் முயற்சி செய்தனர்.

ஆனால் ஸ்பெயின் அணி தங்களுடைய உத்திகள் மூலம் அதனை எளிதாக எதிர்கொள்ள போட்டியின் முடிவில் ஸ்பெயின் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இதன் மூலம் நான்காவது முறையாக யூரோ கி்ண்ணததை ஸ்பெயின் அணி கைப்பற்றி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு ஸ்பெயின் வெல்லும் முதல் சர்வதேச தொடர் இதுவாகும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles