NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

FA கிண்ண இறுதிப் போட்டி – மென்செஸ்டர் சிட்டி கிண்ணம் வென்று சாதனை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

FA கிண்ண இறுதிப் போட்டி வரலாற்றில் அதிவேக கோல் உட்பட 2 கோல்களின் பலனாக மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை 2 – 1 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு மென்செஸ்டர் சிட்டி கழகம் FA கிண்ண சம்பியனானது.

கடந்த மாதம் 20ஆம் தனது மூன்றாவது தொடர்ச்சியான பிறீமியர் லீக் கால்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை சுவீகரித்த மென்செஸ்டர் சிட்டி, 2 வாரங்கள் கழித்து இப்போது FA கிண்ண சம்பியன் பட்டத்தையும் வென்றெடுத்துள்ளது.

மென்செஸ்டர் கால்பந்தாட்ட ஜாம்பவான்களான 2 கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது மிகப் பெரிய இறுதிப்போட்டி இதுவாகும்.

Share:

Related Articles