(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
FIFA மகளிருக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் முதலாவது அரையிறுதி போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் ஸ்பெயின் அணியை ஸ்வீடன் அணி எதிர்கொள்ளவுள்ளது.
குறித்த போட்டியானது நியூசிலாந்தில் உள்ள ஈடன் பார்க் (Eden Park)மைதானத்தில் இலங்கை நேரப்படி நண்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 11ம் திகதி நடைபெற்ற FIFA மகளிருக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் முதலாவது தகுதிகாண் சுற்றில் நெதர்லாந்திடம் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் சுற்றில் ஜப்பான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்விடன் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் வெற்றிபெறும் அணியானது நேரடியாக இறுதி சுற்றிற்கு தகுதி பெரும்.
தோல்வியடையும் அணி எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவிருக்கும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பங்கேற்கும்.
மேலும் எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி சுற்றில் அவுஸ்திரேலியா அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது.
கடந்த 12ம் திகதி நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி முறையின் அடிப்படையில் 7- 6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி இரண்டாவது அரையிறுதி சுற்றில் விளையாட நேரடியாக தகுதி பெற்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற நான்காவது காலிறுதி போட்டியில் கொலம்பியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீதி இங்கிலாந்து அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டு அரையிறுதி போட்டியிலும் வெற்றிபெறும் அணிகள் எதிர்வரும் 20 திகதி அவுஸ்திரேலியாவில் உள்ள Accor மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் பங்கேற்கும்
மேலும், இரண்டு அரையிறுதி போட்டியிலும் தோல்வியடையும் அணிகள் எதிர்வரும் 19 திகதி அவுஸ்திரேலியாவில் உள்ள Suncorp மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பங்கேற்கும்
அத்துடன் நடப்பு சாம்பியனான அமெரிக்கா மகளிர் அணி காலிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.