(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கனடா, பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் G7உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று (19) ஆரம்பமாகின்றது.
3 நாட்கள் நடைபெறுகின்ற இம்மாநாடு 21 ஆம் திகதி முடிவடைகின்றது.
உறுப்பு நாடுகளுடன் இந்தியா, தென்கொரியா, அவுஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ், குக் தீவு ஆகிய 7 நாடுகளும் கலந்து கொள்ளவுள்ளன.
ஹிரோஷிமா நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின்போது, 1945ஆம் ஆண்டு அமெரிக்கா அணுக்குண்டு வீசியது. இதில் அந்த நகரின் பெரும்பகுதி அழிந்ததுடன், ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அங்கு அணுக்குண்டு வீச்சு நினைவு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கின்ற தலைவர்கள் சென்று நினைவஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.