லங்கா பிரீமியர் லீக் தொடரில் Be Love kandy அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் Galle Titanns அணி 83 ஓட்டங்களால் வெற்றியடைந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய Galle Titans அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.
தொடர்ந்து 181 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய Be Love kandy அணி 17.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.