(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
லங்கா பிரீமியர் லீக் போட்டியில் மாற்று வீரர்களாக இரண்டு வெளிநாட்டு வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, காலி டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த டிம் Tim Seifert (New Zealand) மற்றும் Chad Bowes (New Zealand) ஆகியோர் தேசிய கடமைகள் காரணமாக புறப்படவுள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக இரு வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்குப் பதிலாக Najibullah Zadran (Afghanistan) மற்றும் Liton Das (Bangaladesh) ஆகியோரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளை (15) நடைபெறவுள்ள நொக் அவுட் போட்டியில் காலி டைட்டன்ஸ் அணி, கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி எல்.பி.எல் தொடரின் இறுதி நான்கில் சேரும்.
இதில் வெற்றி பெறும் அணி தம்புள்ளை ஆரா, பி-லவ் கண்டி மற்றும் யாழ் கிங்ஸ் ஆகிய அணிகளுடன் போட்டியின் இறுதி நான்கில் சேரும்.
தம்புள்ளை ஓரா மற்றும் பி-லவ் கண்டி அணிகள் எல்பிஎல் லீக் கட்டத்தில் முதலிடம் வகிக்கும், மேலும் அவர்கள் குவாலிஃபையர் 1இல் விளையாடுவார்கள்.
நாளை காலி டைட்டன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலில் வெற்றிபெறும் அணி ஜப்னா கிங்ஸ் அணியுடன் எலிமினேட்டரில் இணையவுள்ளது.
நாளை மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டால், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் காலி டைட்டன்ஸ் அணிகள் தகுதி பெறும் அதே வேளையில் யாழ் கிங்ஸ் அணி வெளியேறும்.